குலதெய்வத்தின் அருள் நமக்கு இருந்தால்,
விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம் போன்ற
பிரசாதங்கள் நம்மைத் தேடி வரும். அதாவது மற்ற
புனித தலங்களுக்குச் சென்று வருபவர்களிடம் இருந்து
இந்த பிரசாதங்களை நாம் பெறுவோம். அதே போல்
பல்லி போன்ற சிறு உயிரினங்கள் நம் வீட்டில் இருப்பது
தெய்வ சக்தி இருப்பதை உணர்த்துவதாகும். மேலும்
குலதெய்வ கோவில்கள் மற்றும் குலதெய்வம் சார்ந்த
கனவுகள் வருதல், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் தங்கு
தடையின்றி நடக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம்
உண்டாகும். மேலும் நினைத்த காரியங்கள் வெற்றி
பெறும். இவையெல்லாம் நம் வீட்டில் குலதெய்வத்தின்
சக்தி நிலைத்து இருப்பதை உணர்த்துகின்றன.
இது நமக்கு குலதெய்வத்தின் ஆசியையும், மற்ற
தெய்வங்களின் ஆசியையும் பெற்றுத் தருகிறது.
Comments
Post a Comment