Skip to main content

வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ

சில எளிய பரிகாரங்கள்....





வீட்டின் நுழைவு வாயில்...
உங்கள் இல்லத்தின் நுழைவு வாயிலில் ஒரு வெற்று சுவர் இருந்தால், உங்கள் இல்லத்தில் தனிமை அதிகம் என்று அர்த்தம். ஆகையால் இல்ல வாசலில் விநாயகர் சிலை ஒன்றை வைத்தால், அது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற்றுத்தரும்.

படுக்கையறை... 
உங்கள் இல்லத்தைக் கட்டும்போதோ அல்லது கட்டிய வீட்டை வாங்குபவராக இருந்தாலும் சரி, உங்கள் படுக்கையறை இல்லத்தின் தென்மேற்குப் பகுதியை நோக்கி இருக்க வேண்டும் என்பதைச் உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் இது தனிப்பட்ட உறவுகளுக்கு நிறைய ஸ்திரத்தன்மையையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாகும். இவ்வாறு செய்வதால் உங்கள் செல்வச்செழிப்பை மேம்படுத்தும். மேலும் இது உங்கள் செல்வ வளத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்யும். பின்னர் படுக்கையறை எப்போதும் நன்கு ஒளிரும் வகையில் பிரகாசமான நிறத்தில் இருத்தல் அவசியம். மேலும் இருண்ட வரைபடங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது படுக்கையறைக்குள் நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும்.

உடைந்த பொருட்கள்...
இல்லத்தில் உடைந்த பொருட்கள் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அது ஒரு ஜன்னல், கண்ணாடி அல்லது ஒரு மரச்சாமானாக இருந்தாலும் சரி, உடைந்தவைகளை நீங்கள் விரைவில் அகற்றிவிட வேண்டும். எனென்றால், உடைந்த பொருட்கள் எதுவாயிருந்தாலும் அது நேர்மறை ஆற்றலின் எளிதான ஓட்டத்தைத் தடுக்கச் செய்கிறது. மேலும் உடைந்த பொருட்கள், உங்கள் குடும்பத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால், அவற்றை இனி உங்கள் இல்லத்தில் ஒருபோதும் வைக்க வேண்டாம்.  அகற்றி விடுவது நல்லது.

சேமிக்கும் இடம்...
பெரும்பாலானோர் தங்கள் இல்லங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படாத தேவையான பொருட்களை சேமித்து வைப்பதற்கென ஒரு இடம் தேவைப்படுகிறது. ஆகவே, அந்த சேமிக்கும் இடத்தை  மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்க வேண்டும். இல்லத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருபோதும் குப்பைகளை ஒதுக்கி வைக்கக்கூடாது. இது நேர்மறை ஆற்றல் பரவுவதை நிறுத்திவிடும்.

கண்ணாடி...
உங்கள் இல்லம் முழுவதும் பல கண்ணாடிகளை வைக்கலாம். இது உங்க வீடு முழுவதும்  மிக அழகான தோற்றத்தை கொடுக்கும். இதனால் நேர்மறை ஆற்றல் பரவும். மேலும் உங்க இல்லமானது சிறந்த பலன்களை பெற கண்ணாடிகளை எங்கு வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசனையைப் பெறுவது அவசியமானது.

புத்தர் சிலை...
அமைதி மற்றும் நல் இணக்கத்திற்காக உங்கள் இல்லத்தில் பல புத்தர் சிலைகளை வைப்பதுவும் செழிப்பின் முக்கிய அடையாளமாக சொல்லப்படுகிறது. ஆகவே, உங்கள் இல்லத்தில் குறைந்தது ஒரு புத்தர் சிலையாவது இருத்தல் அவசியம். உங்கள் இல்லத்தில் தோட்டம் இருந்தால், அங்கு ஒரு புத்தர் சிலையை வைக்கலாம். இந்த  புத்தர் சிலையை சரியான இடத்தில், சரியான திசையில் வைக்கப்படும் போது தான் உங்கள் இல்லத்திற்கு மகத்தான அமைதி, நல்லிணக்கம் மற்றும் செல்வம் போன்ற அற்புதமான மதிப்பைக் கொண்டு வரும்.


வடகிழக்கு திசை...
செல்வம், அமைதி மற்றும் செழிப்பு முதலியவற்றை ஈர்க்க உங்கள் சாப்பாட்டு அறையின் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் மிகப் பெரிய கண்ணாடியை அவசியம் வைக்க வேண்டும்.

குடும்பப் படங்கள்...
இல்லத்தின் தென்மேற்கு சுவரில் அமைதி, அன்பு மற்றும் உறவுகளை மேம்படுத்த உங்கள் குடும்பத்துடன் உள்ள புகைப்படம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை வைக்க வேண்டும்.



Comments

Popular posts from this blog

சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...

பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை  பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...

5 Secrets of Navratri Rituals...

நவராத்திரி 5ம் இல்லத்தில் குறைவில்லாமல் செல்வ வளம் பெருக மகாலட்சுமியை வழிபாடு செய்வது எப்படி? எந்த இடங்களில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை வழிபாடு

  இந்த வழிபாடு செய்வோர் இல்லத்தில் செல்வவளம் பெருகும். மகாலட்சுமி படத்தை கிழக்கு திசை நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் உங்களுக்கு எந்த மலர் கிடைக்கின்றதோ, அந்த மார்களை சாற்றி விளக்கு ஏற்றி, காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி என இதில் ஏதாவது ஒன்றை படித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டை எவர் ஒருவர் தங்கள் இல்லத்தில் செய்கின்றனறோ, அங்கு செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஸ்லோகத்தை மனம் உருக உச்சரித்து வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும். மேலும் பதவி உயர்வு கிடைக்க , இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் பெருக – மந்திரம், ஸ்தோத்திரம், வழிபாடு! நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம: நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம: த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸ...



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com