Skip to main content

புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு 2025...

 எளிய மந்திரம், ஆயுள், ஆரோக்கியம், செல்வம் தரும் வழிபாடு...



புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று பெருமாளின் மனம் குளிரும் படி நாம் வழிபாடு செய்தால், திருப்பதி ஏழுமலையான் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளிக் கொடுப்பார். அதோடு மட்டுமில்லாமல் அம்பிகையின் வழிபாடும் நமக்கு வெற்றி மற்றும் மங்களங்களை அள்ளிக் கொடுக்கும். மேலும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று என்ன மந்திரம் சொல்லி, பெருமாளை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவலை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்..

புரட்டாசி மாதம் என்றாலே திருப்பதி ஏழுமலையானை  (பெருமாள்) வழிபடுவதற்கு உரிய அற்புதமான மாதமாகும். அதிலயும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளின் அருளைப் பெறுவதற்கு மட்டுமின்றி, சனீஸ்வர பகவானால் ஏற்படக் கூடிய தொல்லை மற்றும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கான அற்புதமான திருநாளாகும். அதாவது புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருள் மட்டுமின்றி அன்னை மகாலட்சுமியின் அருளும், நவகிரகங்களின் அருளும் கிடைக்கப் பெறலாம்.. புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்பவர்களின், இந்த பிறவியில், மட்டுமின்றி பல பிறவி பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.

புரட்டாசி சனிக்கிழமை 2025:
இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகள் வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் புரட்டாசி மாதம் தொடங்கி பெருமாள் ஆலயம் மற்றும் இல்லங்களில் விரதம் இருந்து பெருமாளுக்கு தளிகை இட்டு நாம் வழிபாடு செய்திருப்போம். ஒரு சிலர் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் வரக்கூடிய புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யமுடியாமல் போயிருக்கும். அவர்கள் நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமையும், பஞ்சமி திதியும் இணைந்து வருகிறது. இது மிகவும் விசேஷமானதாகும். இந்த வருடம் புரட்டாசி கடைசி சனிக்கிழமை அக்டோபர் 11ம் தேதி நாளைய தினம் வருகிறது. இந்த நாளில் ஒரு குறிப்பிட்ட முறையில் பெருமாளை வழிபாடு செய்தால் அளவில்லாமல் அருளையும், பொருளையும் அள்ளிக் கொடுப்பான் நம் ஏழுமலையான். அதாவது நாளை (11.10.2025) 12.30 முதல் 01.20 வரையிலான வேளையில் தளிகை இட்டு வழிபாடு செய்யலாம். பெருமாளுக்கு தளிகையிடும் போது வாழை இலையில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, நெல்லிக்காய் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல், பாயசம் போன்றவற்றில் எது உங்களால் முடிகிறதோ, அதை நிவேதனம் செய்து வழிபாடு செய்யுங்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதும், அருகில் உள்ள பெருமாள் ஆலயம் (அ) ஆஞ்சநேயர் ஆலயம் (அ)ஹயக்ரீவர் ஆலயம் முதலான ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது இன்னும் சிறப்பு வாய்ந்தது.. மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் காகம், பசு முதலானவற்றிற்கு உணவிடுவது மிகவும் விசேஷமானதாக சொல்லப்படுகின்றது.

சொல்ல வேண்டிய மந்திரம் :
1. ஓம் கேசவாய நமஹ
2. ஓம் நாராயணாய நமஹ
3. ஓம் மாதவாய நமஹ
4. ஓம் கோவிந்தாய நமஹ
5. ஓம் ரிஷிகேசாய நமஹ
6. ஓம் தாமோதராய நமஹ
7. ஓம் வெங்கட நாதாய நமஹ
8. ஓம் ரங்கநாதாய நமஹ
9. ஓம் மதுசூதனாய நமஹ
10. ஓம் திரிவிக்ரமாய நமஹ

நாளைய தினம் புரட்டாசி மாத சனிக்கிழமை முடிவடைகிறது. ஆகையால் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு, துளசி பூஜை, ராமாயணம் (அ) சுந்தர காண்ட பாராயணம் செய்து, பெருமாளை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, கடன் சுமை குறைந்து, வளமான வாழ்க்கை அமையும்.

பெருமாளின் அருளை பெருவதற்கான வழிபாடு :
மேற்குறிப்பிட்ட மந்திரங்களை சொல்லி மலர்கள் தூவி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு ஓம் நமோ நாராயணாய நமஹ, ஓம் கோவிந்தாய நமஹ என்ற மந்திரங்களில் ஏதாவது ஒன்றை 108 முறை சொல்லி வழிபாடு செய்து, தீப தூபம் காட்டி வழிபாடு செய்யுங்கள். மேலும் புரட்டாசி மாதம் முழுவதும் நம்முடைய இல்லத்தில் இருந்து அருள் செய்ததற்காக பெருமாளுக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும்.
பின்பு, ஏழுமலையானிடம் பெருமாளே,கேசவா நீ திரும்பிச் சென்றாலும், உன்னுடைய அருட் கடாட்சம் எப்போதும் எங்கள் இல்லத்தில் நிறைந்திருக்க வேண்டும் என பெருமாளை மனதார வழிபட்டு வேண்டிக் கொள்வது சிறப்பான பலனைத்தரும். அன்றைய தினம் பஞ்சமி திதி என்பதால், மாலை வேளையில் வாராஹி அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்தால், பெருமாளின் அருளுடன், வாராஹி அன்னையின் ஆசியும் கிடைக்கும்.







Comments

Popular posts from this blog

சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...

பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை  பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...

5 Secrets of Navratri Rituals...

நவராத்திரி 5ம் இல்லத்தில் குறைவில்லாமல் செல்வ வளம் பெருக மகாலட்சுமியை வழிபாடு செய்வது எப்படி? எந்த இடங்களில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை வழிபாடு

  இந்த வழிபாடு செய்வோர் இல்லத்தில் செல்வவளம் பெருகும். மகாலட்சுமி படத்தை கிழக்கு திசை நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் உங்களுக்கு எந்த மலர் கிடைக்கின்றதோ, அந்த மார்களை சாற்றி விளக்கு ஏற்றி, காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி என இதில் ஏதாவது ஒன்றை படித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டை எவர் ஒருவர் தங்கள் இல்லத்தில் செய்கின்றனறோ, அங்கு செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஸ்லோகத்தை மனம் உருக உச்சரித்து வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும். மேலும் பதவி உயர்வு கிடைக்க , இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் பெருக – மந்திரம், ஸ்தோத்திரம், வழிபாடு! நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம: நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம: த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸ...
https://aanmeegamtirumal.tumblr.com/post/797001290921181184/aanmeegam-tirumal



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com