Navarathiri 6th day pooja
வாழ்க்கைக்கு தேவையான எல்லா விதமான
செல்வங்களையும் வேண்டி பெறுவதற்குரிய மிக
முக்கியமான தினமாகும். நவராத்திரியின் 6ம் நாள்
வழிபாடு என்பது எப்பவுமே தனித்துவமான, விசேஷமான
பலனை தரக் கூடிய சக்தி வாய்ந்த திருநாளாகும்.
நவராத்திரியின் 6ம் தினத்தன்று மகாலட்சுமியை எப்படி
வழிபாடு செய்ய வேண்டும், அலங்காரம், மலர் மற்றும்
நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்
என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 6ம் நாளில் அன்னை மகாலட்சுமி,
சண்டிகா தேவி ரூபத்த்தில் காட்சி அளிக்கிறாள்.
இவள் குழந்தை மனம் கொண்டவள் என கூறப்பட்டாலும்,
உக்கிர வடிவம் கொண்டவள். இந்த தேவிக்கு போர் குணம்
என்பது உண்டு. பக்தர்களுக்கு வருகிற இன்னல்களை
அகற்ற கோபமாக வரக்கூடிய ரூபமாக இந்த சண்டிகா
தேவி விளங்குகிறாள். மேலும் ஹோமங்களில் சண்டி
ஹோமம் மிகவும் சக்தி வாய்ந்த ஹோமமாக
சொல்லப்படுகிறது. இந்த ஹோமத்தின்
நாயகியாக சண்டிகா தேவி.
இந்த தேவியை நாம் வழிபாடு செய்யும் போது
ஜென்மங்களாக தொடரும் பாவங்களும்,சாபங்களும்
நீங்குகிறது. பொதுவாக சாபங்கள் 13 வகைகளாக
சொல்லப்படுகிறது. அதோடு தொடர்ந்து வரக் கூடிய
பய உணர்வையும் தேவி சண்டிகா போக்குகிறாள்.
மேலும் தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக
தொடரக்கூடிய தரித்திரயத்தையும் போக்கக் கூடியவள்
இந்த சண்டிகா தேவி.
Comments
Post a Comment