Skip to main content

நவராத்திரி 4ம் நாள் இல்லத்தில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

நவராத்திரியின் முதல் மூன்று கிழமைகளில் மலைமகளின் அம்சமான துர்கையை வழிபாடு செய்தோம். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியின் 4ம் நாள் பூஜை முறை, நேரம், கடன் தீர மகாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

 வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு தந்தருள்வாள். நவராத்திரியின் 4ம் தினத்தன்று பெண் குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் ஐந்து வயது பெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒரு குழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் இல்லத்துக்கு வரவழைத்து, ரோகிணி என்ற திருப்பெயருடன் வழிபடுதல் வேண்டும். ரோகிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்று பொருள். 

4வது நாளில் பெண்குழந்தைகளை ரோகிணியாக வழிபட்டால், நோய் நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெற முடியும்.. 4ம் தினத்தன்று காலையில் முழு அரிசியைக் கொண்டு படிக்கட்டுக் கோலம் போடுதல் வேண்டும். பிறகு லட்சுமி அஷ்டோத்திரம், சக்தி வாய்ந்த மந்திரம் மற்றும் லட்சுமி வழிபாட்டுப் பாடல்களைப் பாடி விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியை வழிபாடு செய்ய வேண்டும்.

மாலையில் வைஷ்ணவி தேவிக்கு நைவேத்தியம் கதம்ப சாதம், ஏதேனும் ஒரு சுண்டலும் செய்து, வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்கவேண்டும். 

  மகாலட்சுமியின் காயத்ரி மந்திரம்: 
"ஓம் மகாதேவ்யை ச வித்மஹே 
 விஷ்ணுபத்னீ ச தீமஹி 
 தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்". 

 இந்த மந்திரம் மகாலட்சுமியின் அருள், செல்வம் மற்றும் செழிப்பை வேண்டி உச்சரிக்கப்படுகிறது. 

 சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் : 
"ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மியே நமஹ" 

 மகாலட்சுமி பீஜ மந்திரம் 
"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் 
 மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, 
 மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா". 

 நவராத்திரியின் 4ம் தினத்தன்று லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலான மந்திரங்களை பாராயணம் செய்வதும், அன்னை மகாலட்சுமியின் 108 திருநாமங்களை உச்சரித்து அர்ச்சனை செய்வதும் மிகவும் சிறப்புக்குரிய பலனைத்தரும். மேலும் அன்றைய தினம் நீங்கள் உடுத்தும் உடை மற்றும் அன்னை மகாலட்சுமியின் உடை கருநீல நிறத்தில் இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாக சொல்லப் படுகிறது.

பலன்கள்; 
பொதுவாக நவராத்திரி பூஜை வழிபாட்டை மேற்கொண்டாலே வாழ்வில் சகல சம்பத்தும் கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது . குறிப்பாக நவராத்திரியின் 4ம் தினத்தன்று மகாலட்சுமியை வழிபாடு செய்வதால் கடன் பிரச்சனை தீரும். பண நெருக்கடி விலகி இல்லத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். மேலும் அன்றைய நாளில் அன்னதானம் செய்வது கூடுதல் பலன்களை பெற்றுத் தரும். இந்த நவராத்திரி காலத்தில் உங்களால் முடிந்த பூஜை பொருட்களை வைத்து அம்பிகையை மனம் உருகி வேண்டினாலே அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைத்துவிடும்.

Comments

Popular posts from this blog

சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...

பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை  பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...

5 Secrets of Navratri Rituals...

நவராத்திரி 5ம் இல்லத்தில் குறைவில்லாமல் செல்வ வளம் பெருக மகாலட்சுமியை வழிபாடு செய்வது எப்படி? எந்த இடங்களில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை வழிபாடு

  இந்த வழிபாடு செய்வோர் இல்லத்தில் செல்வவளம் பெருகும். மகாலட்சுமி படத்தை கிழக்கு திசை நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் உங்களுக்கு எந்த மலர் கிடைக்கின்றதோ, அந்த மார்களை சாற்றி விளக்கு ஏற்றி, காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி என இதில் ஏதாவது ஒன்றை படித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டை எவர் ஒருவர் தங்கள் இல்லத்தில் செய்கின்றனறோ, அங்கு செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஸ்லோகத்தை மனம் உருக உச்சரித்து வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும். மேலும் பதவி உயர்வு கிடைக்க , இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் பெருக – மந்திரம், ஸ்தோத்திரம், வழிபாடு! நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம: நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம: த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸ...



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com