நவராத்திரி முதல் நாள் வழிபாடு 2025
நவராத்திரி என்றால் சக்தியின் வடிவமாக திகழும் துர்க்கை, லட்சுமி, மற்றும் சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களை காெண்டாடக்கூடிய ஒரு பண்டிகையாகும். இந்த நவராத்திரிக்கு "ஒன்பது இரவுகள்" என்று பொருள். நவராத்திரியின் முதல் மூன்று தினங்கள் வீரத்திற்காக துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்திற்காக லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் கல்வி மற்றும் கலைகளுக்காக சரஸ்வதியையும் வழிபட்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது தீமையை அழித்து, வெற்றியைக் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
நவராத்திரி என்பது அம்பிகையை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான காலமாகும். இது நவராத்திரியின் ஒன்பது தினங்களும் அம்பிகையை இல்லத்தில் எழுந்தருள செய்து, மனம் உருகி எவர் ஒருவர் வழிபடுகின்றாரோ அவர்களுக்கு எல்லா விதமான நலன்களையும் வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் போக்கிடுவாள் அம்பாள் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.
நவராத்திரி வழிபாட்டினை எப்படி துவங்க வேண்டும், எந்த நாளில் பொம்மைகளை அடுக்க தொடங்க வேண்டும், முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை வழிபாடு செய்ய வேண்டும், எந்த நிறத்தில் உடை உடுத்தி, என்ன நைவேத்தியம் நிவேதனம் செய்து, எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்ற தகவலை தெரிந்து கொள்ள தாெடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
விரதத்தின் மகிமை என்ன?
நவராத்திரி விரதமானது அன்னை சக்தியை ஒன்பது இரவுகள் வழிபட்டு, உலக நன்மைக்காகவும், வளமான வாழ்விற்காகவும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு வழிபாடாகும். இந்த விரதம், பொதுவாக புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் ஒன்பது நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது. முதல் மூன்று தினங்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று தினங்கள் லட்சுமியாகவும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதியாகவும் அம்பிகையை வழிபாடு செய்கிறோம். இந்த விரதத்தின் மூலம், பக்தர்கள் சக்தி வாய்ந்த அன்னை சக்தியின் அருளைப் பெற்று, நலமும் வளமும் பெறுகிறார்கள் என்பது தான் மிகச்சிறப்பு.
நவராத்திரி 2025 எப்போது?
இந்த ஆண்டு நவராத்திரி விழா செப் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 2ம் தேதி விஜயதசமியோடு நிறைவடைகிறது(11 நாட்கள்). நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும், முதல் நாளில் அம்பிகையை எந்த நிறத்தில், என்ன நைவேத்தியம் நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய முறைகளில் வழிபடுவது சாலச்சறந்தது,
22/09/25 துவங்கி 02/10/25 வரை,.
நவராத்திரி முதல் நாள் வழிபாடு :
செப் 21ம் தேதியே கொலு பொம்மைகள் அல்லது கலசம் அமைத்து, நவராத்திரி வழிபாட்டினை துவங்கி விடுவது தான் பெரும்பாலானவர்களின் வழக்கமாக உள்ளது. அன்றைய தினமே அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய துவங்கி விட வேண்டும். செப் 22ம் தேதி நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை சைலபுத்திரியாக வழிபாடு செய்ய வேண்டும். இவளுக்குரிய நிறம் வெளிர் ஆரஞ்சு அல்லது பிங்க். ஒரு கரத்தில் திரிசூலமும், மற்றொரு கரத்தில் தாமரையும் ஏந்தி, ரிஷப வாகனத்தில் காட்சி தரும் இந்த அம்பிகைக்கு மஞ்சள் நிறத்தால் ஆன பொருட்களை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். மஞ்சள் நிற ஆடையை நாம் உடுத்திக் கொண்டு மஞ்சள் நிற கேசரி, எலுமிச்சை சாதம், வெண் பொங்கல், என நைவேத்தியத்தை படைத்து வழிபடலாம். அத்துடன் கடலைபருப்பு சுண்டல் படைத்தும் வழிபாடு செய்யலாம்.
நவராத்திரி விரதம் மேற்கொள்வது எப்படி?
நவராத்திரி விரதம் இருப்பவர்கள், அசைவ உணவை தவிர்த்து, ஒருவேளை மட்டும் உணவு உண்டு உபவாசம் இருக்க வேண்டும், மேலும் தரையில் விரிப்புகள் விரித்து உறங்க வேண்டும். இந்த ஒன்பது தினங்களும் பொதுவாக சக்தி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களை வழிபட்டு வீரம், செல்வம், கல்வி முதலியவற்றை வேண்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மேலும் கொலு வைப்பது, பூஜைகள் செய்வது, பக்திப் பாடல்கள் பாடுவது என இந்த விரதத்தின் முக்கிய அம்சங்களாகும்.
விரதம் இருக்கும் முறை:
உணவுக்கட்டுப்பாடு: ஒன்பது நாட்களும் அசைவத்தை தவிர்த்து, எளிமையான சைவ உணவை ஒரு வேளை மட்டும் உண்ணலாம். பால், பழங்கள், காய்கறிகள் ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன.
விரதத்தின் போது சாப்பிடாமல் இருந்து, பூஜைகள் செய்த பின்னரே உணவு உண்ண வேண்டும். வசதியான பஞ்சனை அல்லது பாயில் படுக்காமல், தரையில் விரிப்புகள் விரித்து தான் உறங்க வேண்டும்.
தினசரி குளித்து, சுத்தமான ஆடை உடுத்தி பூஜைகளில் ஈடுபட வேண்டும். அன்றாடம் மாலை வேளையில், இல்லங்களில் கொலு வைத்து, தேவிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு
நவராத்திரி தினங்களில் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். மேலும் பக்திப் பாடல்கள் பாடுவது மற்றும் அம்மன் மந்திரங்களை உச்சரிப்பதும், இந்த விரதத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.
முதலாவது நாள் படிக்க வேண்டிய மந்திரம் :
நவராத்திரியின் முதல் தினத்தன்று கொலு அல்லது கலசம் வைத்து என எப்படி வழிபாடு செய்தாலும், மஞ்சள் நிற மலர்களால் அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், துர்காஷ்டகம், தேவி மகாத்மியம், லலிதா திரிசதி, ஷ்யாமள தண்டகம் உள்ளிட்ட ஸ்லோகங்களை படிப்பது மிக விசேஷமானதாகும். அபிராமி அந்தாதியை மொத்தமாக 100 பாடல்களையும் படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் 10 பாடல்கள் என்ற விகிதத்திலும் படிக்கலாம். தோடி ராகத்தில் பாட வேண்டும். இந்த முதல் நாள் விரதத்தின் முலம் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கி, வாழ்நாள் பெருகும்.
பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...
Comments
Post a Comment