வீட்டில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம் 2025 | வறுமை நீங்கி | இல்லத்தில் செல்வச் செழிப்பு உண்டாக:
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொருத்தரும் இந்த விரதத்தை தவறாமல் இருக்க வேண்டும் என நம் முன்னோா்கள் சொல்லியிருக்கிறாா்கள்,. அதாவது புரட்டாசி மாதம் முழுவதும் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாவிட்டாலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்தாலே, அந்த மாதம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைத்து விடும்,.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து, வழிபாடு செய்வதில் மிகப் பெரிய ஆன்மிக ரகசியம் அடங்கி உள்ளது. அந்த ரகசியம் பற்றி நீங்க தெரிந்து கொண்டால் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீங்க. ஆகையால் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயத்துக்குச் செல்லுங்கள். தாயாரையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள். மேலும் கோவிந்தனிடம் குறைகளை எல்லாம் சொல்லி வேண்டுதல் வையுங்கள்.
குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் யாா் ஒருவர் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்கின்றனரோ அவரை சனி பகவான் துன்புறுத்துவது கிடையாது. மாறாக அவர்களுக்கு நன்மைகளை மட்டும் வழங்குவதாக திருப்பதி ஏழுமலையானிடம் சனீஸ்வரபகவான் வாக்குறுதி அளித்திருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.
விரதத்தின் மகிமை :
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்த ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்வது பெரும் புண்ணியத்தை தரும். அவை
பெருமாள் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, முனீஸ்வரர் வழிபாடு, ஐய்யனார் வழிபாடு, ஐயப்பன் வழிபாடு முதலானவை.. இதை சனி கீர்த்தி என்றே சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்வதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். வழக்கமாக மற்ற சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயத்துக்குச் சென்று பிரசாதம், துளசி போன்றவற்றை தான் இல்லத்திற்கு வாங்கி வருவார்கள். ஆனால் புரட்டாசி மாத சனிக்கிழமையில் மட்டும் பெருமாள் ஆலயத்துக்கு சென்று தீர்த்தத்தை இல்லத்திற்கு வாங்கி வருவார்கள். இந்த தீர்த்தமானது எல்லா விதமான நோய்கள் மற்றும் பாவங்களை தீர்க்கக் கூடியது என வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன.
ஆகையால், புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யுங்கள். இதனால் பெருமாளின் அருள் கிடைப்பதோடு, சனீஸ்வரபகவானால் ஏற்படக்கூடிய தீய பலன்கள் குறைந்து அவரின் பரிபூரணமான அருளாசி கிடைக்கப் பெறலாம்.
வறுமை நீங்கி, இல்லத்தில் செல்வச் செழிப்பு உண்டாக:
பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் இல்லத்திலேயே வெங்கடாசலபதியின் திருவுருவப் படத்தை வைத்தும் வழிபாடு செய்யலாம். ஆகவே புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வெங்கடாசலபதியின் படம் ஒன்றை வைத்து, துளசி மாலை சாற்றி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். ஒரு சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி இலைகளால் பெருமாளை
அர்ச்சிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பச்சரிசி மாவை தூய மனதோடு சலித்து,அந்த
மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னால், இவ்லாறு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால், குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கி, இல்லத்தில் செல்வச் செழிப்பு உண்டாகும்.
புரட்டாசி சனிக்கிழமை விரத பலன்கள் :
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருப்பவர்களுக்கு பித்ருக்களின் ஆசி, தெய்வத்தின் அருள் மற்றும் வேண்டும் வரத்தை தரும் தேவதை பலன் என மூன்று விதமான பலன்கள் கிடைக்கப் பெறுவா். அது மட்டும் இல்லை, புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருப்பதால் நாம் செய்த பாவங்கள் மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்கள் செய்த பாவமும் நீங்கி, அவர்கள் மோட்சம் அடைவதற்கான வழியும் கிடைப்பதால் அந்த புண்ணியமும் சேர்த்து நமக்கே கிடைக்கின்றது. எனவே வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்ததற்கு இணையான பலனை தரக் கூடியது தான் இந்த புரட்டாசி மாத சனிக்கிழமை விரதமாகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது நல்லபலனை தரும். ஆகையால் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து,வெங்கடாசலபதியை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு சிறப்பான மகத்துவம் இருக்கிறது.
பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...
Comments
Post a Comment