குலதெய்வக் கோயிலுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு ஏதேனும் திருப்பணிகளைச் செய்யவேண்டும். கோயிலை தூய்மைப்படுத்துதல், தண்ணீர் டேங்க் அமைத்துக் கொடுத்தல், சந்நிதிகள் புதுப்பிக்க உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், ஸ்தல விருட்சங்களை அமைத்தல் முதலான விஷயங்களைச் செய்யலாம்.குலதெய்வக் கோயிலுக்கு எண்ணெய், திரி முதலானவற்றை வழங்கலாம்.
நம் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாக் கொள்ளவேண்டும். குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை முறையே செய்து வரவேண்டும்.
குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவோம். நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். நம் வழக்கப்படி, குலதெய்வத்துக்குப் படையலிட்டுப் பிரார்த்தனைகள் செய்தால், சகல பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும்.
அடிக்கடி குலதெய்வத்தை வழிபட முடியாதவர்கள் வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டில் சாமி கும்பிடும் போது ஒரு கலசத்தில் நிறைய தண்ணீர் வைத்து அதில் மாவிலை, வேப்பிலை, மஞ்சள் போட்டு கலசத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கலசத்திற்கு பூ வைத்து அதை குலதெய்வமாக நினைத்து வழிபட வேண்டும்.
Comments
Post a Comment