ஆன்மிகம் திருமால் நண்பர்களுக்கு
எனது அன்பான வணக்கம்....
கோவிலுக்கு போக முடியவில்லையே
என்ற கவலை இருந்தால்? வீட்டிலிருந்த படியே
அம்மனை வழிபடலாம்.வீட்டிலிருந்த படியே
அம்மனை வழிபடலாம்.
உங்களுடைய வீட்டில் அம்மன் படம்
இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த
ஒரு அம்மன் படமாக இருந்தாலும் சரி,
அம்மனின் திருவுருவ படத்திற்கு, முடிந்தவரை
அரளிபூ வாங்கி சூட்ட வேண்டும். அரளிப் பூ
கிடைக்காத பட்சத்தில், வாசனை மிகுந்த
பூக்களைச்சூட்டுங்கள். இரண்டு இனுக்கு
வேப்பிலை, ஒரு எலுமிச்சை பழத்தை அம்மனின்
திருவுருவ படத்திற்கு முன்பாக
வைத்துவிடுங்கள். அதன் பின், ஒரு மண்
அகல் விளக்கு, ஒரு சிறிய தாம்பூலத் தட்டு,
கொஞ்சம் போல் அருகம்புல், விளக்குத் திரி,
நெய் அல்லது நல்லெண்ணெய் இவை
மட்டும் போதும்.
Comments
Post a Comment