Skip to main content

குலதெய்வத்தைக் கண்டறிவது? #trending #viral



நமக்குத் தெரியாத குல தெய்வத்தை அறிந்து கொள்ள செய்யும் பிரார்த்தனை முறையை செவ்வாய்கிழமையில் தான் செய்யத் துவங்க வேண்டும். ஏனெனில் செவ்வாய் கிழமையே ஆண் மற்றும் பெண் என்ற இரு தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும்.

குலதெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் குடும்பத்தில் துயர சம்பவங்கள் நடந்தாலும், அவர்களால் மிக விரைவாக அதிலிருந்து மீண்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கி பயணிக்க இயலும். 

அதே தருணத்தில் குல தெய்வ வழிபாட்டை தவறவிட்டவர்கள் அல்லது தெரிந்தும் தொடராதவர்கள், கோடி கோடியாய் சம்பாதித்தாலும் மன கவலையுடனும், சஞ்சலமான மனதுடனும், வெளியில் பகிர்ந்து கொள்ள இயலாத நோயுடனும் தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்வர்.

தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு, அவர்களின் மனதில் உடனடியாக எம்முடைய குலதெய்வத்தை கண்டறிவது எப்படி? என்ற வினா சந்தேகமாக எழக் கூடும். இதற்கு ஆன்மீக பெரியவர்கள் சில உபாயங்களை முன் வைக்கிறார்கள். 

வேறு சிலர், தங்களது ஜாதகத்தை சோதிடர்களிடம் காட்டி குலதெய்வத்தை கண்டறிந்து தருமாறு கேட்கிறார்கள். ஜோதிடர்களும் சில ஜோதிட கணக்கை துல்லியமாக அவதானித்து குலதெய்வத்தை கண்டறிந்து தெரிவிக்கிறார்கள். ஆனால் அனைத்து சோதிடர்களும் ஒரே குலதெய்வத்தை சுட்டிக்காட்டுவதில்லை. 

இதனால் எம்மில் பலருக்கு குலதெய்வம் எது? என்பதில் குழப்பமும், கவலையும் ஏற்படுகிறது. வேறு சிலர் ஜாதகத்தை தவிர்த்து ஜீவநாடி முறையிலும், அருள்வாக்கு முறையிலும் குலதெய்வத்தை கண்டறிய முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கும் முழுமையான வெற்றி கிடைப்பதில்லை.

இந்நிலையில் குலதெய்வத்தை கண்டறிய வேண்டும் என்றால், ஆன்மீக பெரியவர்கள் தானம், தவம் என இரண்டு விடயங்களை முன்னிறுத்துகிறார்கள். 

அதாவது அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு திகதிகளில் ஏதேனும் ஒரு தினத்தில் சென்று, தீபம் ஏற்றி மனமுருக பிரார்த்திக்க வேண்டும். 

'பிரபஞ்சமே ..! ஏதேனும் சில காரணங்களால் எம்முடைய முன்னோர்கள் எம்முடைய குலதெய்வ வழிபாட்டை தொடரவில்லை. 

அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளாமல், கருணை காட்டி, உங்களை எங்களால் உணர வைக்க வேண்டும் அல்லது நீங்கள் எங்கு குடி கொண்டிருக்கிறீர்கள்? என்பதனை வெளிப்படுத்த வேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். 

இந்த பிரார்த்தனையுடன் நில்லாது உங்களது பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் ஏதேனும் ஒரு தினத்தை தெரிவு செய்து அன்றைய நாளில் ஐந்து பேருக்காவது அன்னதானத்தை செய்ய வேண்டும்.

இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் அல்லது தொடர்ந்து 48 நாட்கள் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய பிரார்த்தனைக்கு இந்த பிரபஞ்சம் பதிலளிக்கும். 

உங்களது கனவிலோ அல்லது உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலமாகவோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ, குறிப்பாக குலதெய்வம் இங்கு இருக்கிறது என்பது தெரியவரும். 

அதன் பிறகு குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், உங்களது எண்ணம் செயலாகி, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். 

உங்கள் முன்னோர்கள் செய்த தவறினை நீங்கள் செய்யாமல், குலதெய்வ வழிபாட்டை உங்களுடைய வாரிசுகளுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் பின்பற்ற வைக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.




Comments

Popular posts from this blog

சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...

பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை  பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...

5 Secrets of Navratri Rituals...

நவராத்திரி 5ம் இல்லத்தில் குறைவில்லாமல் செல்வ வளம் பெருக மகாலட்சுமியை வழிபாடு செய்வது எப்படி? எந்த இடங்களில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை வழிபாடு

  இந்த வழிபாடு செய்வோர் இல்லத்தில் செல்வவளம் பெருகும். மகாலட்சுமி படத்தை கிழக்கு திசை நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் உங்களுக்கு எந்த மலர் கிடைக்கின்றதோ, அந்த மார்களை சாற்றி விளக்கு ஏற்றி, காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி என இதில் ஏதாவது ஒன்றை படித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டை எவர் ஒருவர் தங்கள் இல்லத்தில் செய்கின்றனறோ, அங்கு செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஸ்லோகத்தை மனம் உருக உச்சரித்து வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும். மேலும் பதவி உயர்வு கிடைக்க , இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் பெருக – மந்திரம், ஸ்தோத்திரம், வழிபாடு! நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம: நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம: த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸ...



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com