நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் கஷ்டங்களை கொடுத்து விடும். அந்த தவறுகளை திருத்திக் கொள்வதோடு பண வருமானத்திற்கு ஏற்ற பரிகாரங்களை செய்ய வேண்டும். நமக்கு செல்வம் அதிகரிக்க அன்னை மகாலட்சுமியின் அருள் தேவை. அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமான சில காரியங்களை நாம் செய்தால் நமக்கு தடையின்றி வருமானம் வரும்.
நாம் பரிகாரம் செய்ய வியாழக்கிழமை நல்ல நாள். குபேரனுக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. குரு புஷ்ய யோகம் இருந்தால் கூடுதல் சிறப்பு. குபேர காலத்தில் குபேர பகவானை வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் சேரும்.
குபேர பூஜை
குபேர பூஜை
வியாழக்கிழமை குபேர பகவானுக்கு நாம் விளக்கு ஏற்றி அதற்கு முன் அமர்ந்து வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி அமர்ந்து இருக்கும். அதனால் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையை சுத்தப்படுத்தி, உங்கள் வீட்டில் இருக்கும் குபேரனின் திருவுருவப்படம் அல்லது குபேரரின் சிலையை சுத்தமாக துடைத்து, அதன் மீது பன்னீர் தடவி, சந்தனம் குங்குமம் ஆகியவற்றை வைத்து அலங்காரம் செய்து. பூக்களை வைத்து பூஜை அறையை தயார்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு பூஜை அறையில் மண் விளக்கை வைத்து அதில் 1 ரூபாய் நாணயம் மற்றும் 2 ஏலக்காய் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு மஞ்சள் நல்லெண்ணெய் திரி போட்டு விளக்கை ஏற்றி குபேரருக்கு நைவேத்தியமாக இனிப்பு பொருட்கள் அல்லது ஏதேனும் பழ வகைகளை வைத்து வழிபட வேண்டும்.
Comments
Post a Comment