Skip to main content

Kandha Sashti Viratham 2025

கந்த சஷ்டி விரத முறை 2025 | பூஜை முறை | விதிகள்


"ஓம் வக்ரதுண்ட மஹாகாய | 
ஸுர்யகோடி ஸமப்ரப | 
நிர்விக்னம் குருமே தேவ | 
ஸர்வ கார்யேஷு ஸர்வதா".


குழந்தை வேண்டி விரதம் - படிக்க வேண்டிய திருப்புகழ்...
செகமாயை யுற்று என் அகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்பம் உடல் ஊறி தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் மலைநேர்புயத்தில் உறவாடி மடிமீதடுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல் அணைக்க வருநீதா முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாது எனக்கு உன் அடிகாண வைத்த தனியேரகத்தின் முருகோனே தருகாவிரிக்கு வடபாரிசத்தில் சமர்வேலெடுத்த பெருமாளே. திருமணம் வேண்டி விரதம் - படிக்க வேண்டிய திருப்புகழ்...

விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த வானி லிந்து மிக வெயில் காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறை பேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குளிர்மாலை யின்க ண் அணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே.

திருப்புகழ் 1296
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண்டதனாலே மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே. சொந்த வீடு, நிலம் கிடைக்க:
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய முருகேசா சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
வேல் மாறல்... ... வேலும் மயிலும் துணை ... திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. ( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... ) ( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... ) பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் பனைக்கமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும் சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும் இடுக்கண்வினை சாடும் சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும் சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு மறத்தைநிலை காணும் தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும் சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும் திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
கந்தர் அலங்காரம் சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

Comments

Popular posts from this blog

சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...

பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை  பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...

5 Secrets of Navratri Rituals...

நவராத்திரி 5ம் இல்லத்தில் குறைவில்லாமல் செல்வ வளம் பெருக மகாலட்சுமியை வழிபாடு செய்வது எப்படி? எந்த இடங்களில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

ஆயுத பூஜை, விஜயதசமி 2025 வழிபடும் முறை...

 விஜயதசமி 2025 வழிபடும் முறை, ஆயுத பூஜை  Aanmeegam Tirumal நவராத்திரியின் முதல் மூன்று தினங்கள் துர்கா  தேவியையும், அடுத்த மூன்று தினங்கள் மகாலட்சுமியையும்,  கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியையும் வழிபாடு செய்கிறோம். அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் வீரம், செல்வம், ஞானம் ஆகிய  மூன்றும் இருத்தல் அவசியம் என்பதை உணர்த்துவதே இதன்  காரணமாகும். நவராத்திரியின் ஒன்பதாம் தினத்தன்று  அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு  ஆயுத பூஜை செய்து வழிபாடு செய்ததாக  புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. இதை ஞாபகப்படுத்தும் விதமாகவே ஆயுத பூஜை  அன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும், நம்முடைய  வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் பொருட்களை வைத்து  கொண்டாடி வருகிறோம். மேலும் நவராத்திரிபண்டிகையின்  நிறைவு நாளான பத்தாவது தினத்தன்று அம்பாள்  மகிஷனை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. வருடத்தின் மற்ற தினங்களில் எத்தனையோ தெய்வங்களை  வழிபாடு செய்தாலும், வருடத்திற்கு ஒரு முறை மிக சிறப்பாக  ஞானத்திற்குரிய சரஸ்வதி...
https://aanmeegamtirumal.tumblr.com/post/797001290921181184/aanmeegam-tirumal



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com