சிவ பெருமானின் எந்த ரூபத்தை
வீட்டில் வைக்க வேண்டும்? எந்த ரூபத்தை
வைத்து வழிபட்டால் என்ன பலன்?
சாஸ்திரப்படி, இல்லத்தில் பூஜை
அறை மட்டுமல்ல, சுவாமி படங்களை எந்த
திசையில் வைக்கிறோம் என்பதும் மிகவும்
முக்கியம். அதே போல் ஒவ்வொரு தெய்வத்திற்கென
ஒரு குறிப்பிட்ட திசை இருக்கிறது. அதன்படி வைத்தால்
மட்டுமே அந்த தெய்வத்தின் அருளை நாம் முழுமையாக
பெற முடியும். இவற்றை திசைமாற்றி வைக்கும் போது சில
சமயங்களில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க வேண்டிய
சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும்.
சிவ பெருமானின் எந்த ரூபத்தை இல்லத்தில்
சிவ பெருமானின் எந்த ரூபத்தை இல்லத்தில்
வைக்க வேண்டும், அதன் மூலம் கிடைக்கும் பலன்
என்ன? இதுபற்றிய தெளிவான கருத்துக்களை தாெடர்ந்து
தெரிந்து கொள்வோம். மேலும் சிவனின் சில ரூபங்களை
இல்லத்தில் வைத்தால், பணம் தங்காமல், வீண் விரயமாகிக்
கொண்டே இருக்கும். இதன் மூலமாக பலவிதமான கஷ்டங்களும்
வந்து சேரும். இல்லத்தில் சிவலிங்கம் வைத்திருப்பவர்கள், தினமும் லிங்கத்திற்கு முறையாக பூஜை செய்யவில்லை என்றால்,
சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
இல்லத்தில் வைக்க வேண்டிய தெய்வப் படங்கள்
அனைவருக்கும் தங்களுக்கு விருப்பமான
தெய்வத்தை இல்லத்தில் வைத்து அன்றாடம் பூஜை
செய்து , இறைவனின் அருளை பெற வேண்டும் என்ற
எண்ணம் இருக்கும். ஆனால் அனைத்து தெய்வங்களின்
படங்களையும் இல்லத்தில் வைத்து வழிபாடு செய்வதற்கு
உகந்தது அல்ல. உக்கிர தெய்வங்களின் புகைப்படங்களை
இல்லத்தில் வைத்து ஒருபோதும் வழிபாடு செய்யக் கூடாது .
சில தெய்வங்களின் படங்களை இல்லத்தில் வைத்து வணங்குவதன்
சிவ பக்தர்களுக்கும் சிவனின் புகைப்படம்,
சிவ சின்னங்கள் மற்றும் விக்ரஹங்கள் முதலானவற்றை
வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் சிவனின் புகைப்படத்தை இல்லத்தில் வைத்து
வழிபடலாமா என்ற குழப்பமும் ஒரு சிலருக்கு இருக்கின்றது.
சிலரின் இல்லங்களில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்வார்கள்.
ஆனால் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்வதற்கு என்று
சில விதிமுறைகள் சாஸ்திரத்தில்குறிப்பிடப்பட்டு ள்ளன.
அவற்றை சரியாக பின்பற்ற முடிந்தால் மட்டுமே, இல்லத்தில்
சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
சிவலிங்கம் வைக்கும் போது கவனிக்க வேண்டியவை :
வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றாடம்
முறையாக அபிஷேகங்கள் செய்து, நிவேதனம் வைத்து
பூஜை செய்ய முடிந்தால் மட்டுமே சிவலிங்கத்தை வைத்து
வழிபாடு செய்ய வேண்டும். சிவலிங்கம் மட்டுமல்ல எந்த
ஒரு சுவாமி சிலையாக இருந்தாலும், வாரத்திற்கு ஒரு
முறையாவது நீரால் கழுவி சுத்தம் செய்து, முறையாக
பூஜைகள் செய்ய வேண்டும், இல்லத்தில் விக்ரஹம்
வைத்திருந்தால், அதற்கு தினமும் நெய்வேத்தியம்
படைக்க வேண்டும். இறைவனுடைய சிலை இல்லத்தில்
இருப்பது, அந்த இறைவனே இல்லத்தில் எழுந்தருள்வதற்கு
சமம் என்பதால், அவற்றை பட்டினி போட்டால்
அந்த தெய்வத்தின் கோபத்திற்கு நாம் ஆளாக
நேரிடும். அதேபோல், சிலைகளை சுத்தபத்தமாக
பராமரிப்பது மிகவும் அவசியம்,
சிவபெருமான் புகைப்படத்தை வைக்கும் போது
சிவன் தியான நிலையில் அமர்ந்து இருக்கும்
புகைப் படத்தை இல்லத்தில் வைக்கலாம். இதனால்
இல்லத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மேலும்
குடும்பத்தில் அமைதி, செல்வ வளம், மகிழ்ச்சி உண்டாகும்.
ஜோதிர்லிங்கம் அல்லது 12 ஜோதிர்லிங்கங்கள்
ஜோதிர்லிங்கம் அல்லது 12 ஜோதிர்லிங்கங்கள்
ஒன்றாக அமைந்தது போன்ற படத்தை இல்லத்தில்
வைக்கலாம். இதுவும் நேர்மறை ஆற்றலை உண்டாக்குவதுடன், இல்லத்தில் இருப்பவர்களுக்கும் நன்மையைத் தரும்.
சிவபெருமான் சிலை (அ) புகைப்படத்தை இல்லத்தில்
வைக்கும் போது வடக்கு திசை நோக்கியே வைக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரப்படி, கைலாய மலை வடக்கு திசையில் இருப்பதால் சிவனின் புகைப்படத்தையும் வடக்கு திசையிலேயே வைக்க வேண்டும்.
இதையெல்லாம் வி்ட சிறப்பு வாய்ந்தது சிவபெருமான்
இதையெல்லாம் வி்ட சிறப்பு வாய்ந்தது சிவபெருமான்
குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை இல்லத்தில் வைப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும்,ஒற்றுமையும் நிலவும்.
இல்லத்தில் வைக்கக் கூடாத சிவ ரூபங்கள்
வைப்பது மிகவும் மங்களகரமானது. இதனால் இல்லத்தில்
அமைதியும், செல்வ வளமும் நிறைந்து இருக்கும். ஆனால் சிவனின் அருளை முழுவதுமாக பெற வேண்டுமானால் சில முக்கியமான செயல்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிவன் கோபமாக இருப்பது போலவோ அல்லது
சிவன் கோபமாக இருப்பது போலவோ அல்லது
ருத்ர தாண்டவம் ஆடுவது போலவோ அல்லது சம்ஹாரம்
செய்வது போன்ற புகைப்படங்களையோ இல்லத்தில் வைக்கக்
கூடாது. அதே போல் தாண்டவ மூர்த்தியான நடராஜரின் படம் மற்றும் சிலையை இல்லத்தில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் இல்லத்தில் பணம் தங்காது. மேலும் தாண்டவ மூர்த்தி ரூபம்இ உக்கிர வடிவம் என்பதால் அதையும் இல்லத்தில் வைப்பது அவ்வளவு சிறப்பல்ல.
வாசலில் நந்தி சிலை இருப்பது ஏன்...?
சிவன் ஆலயத்தின் வாசலில் நந்தி சிலை இருக்கும்.
சிவன் ஆலயத்தின் வாசலில் நந்தி சிலை இருக்கும்.
அந்த சிலை சிவனை நோக்கி தான் இருக்கும். மேலும்
நந்தியின் நான்கு கால்களும் நான்கு வகையான குணத்தை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அதாவது சமம்,
விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் ஆகிய நான்கு குணம்.
சிவன் மீது அதீத பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் சொல்லப்படுகிறார். நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலையே தடுப்பது தான். அதாவது நந்திதேவர் அனுமதி பெறாமல் ஈசன் இருக்கும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.
நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப் பெற முடியும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால்தான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபாடு செய்பவர்களுக்கு அருள் மற்றும் வரம் தரும் பேறு கிடைக்கும். நந்தி வழிபாடு நற்கதியளிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் சிவபெருமானின் சகல அதிகாரங்களையும்

பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு.
நந்தி (காளை) இந்துக் கடவுள் சிவனின் வாகனம் ஆவார்.
இவர் கயிலாய உலகின் வாயிற் பாதுகாவலனாக விளங்குகிறார்.
சிவன் புகைப்படங்கள் வைப்பதற்கான விதிமுறைகள் :
சிவபெருமானின் புகைப்படம் அல்லது சிலைகள் சேதமடைந்த நிலையில் இருந்தால், அதை இல்லத்தில் ஒரு போதும் வைத்திருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக ஆற்றில் விட்டு விடுதல் நல்லது.
அதேபோல் சிவன் நின்ற கோலத்தில் இருக்கும் சிலை அல்லது புகைப்படத்தை இல்லத்தில் ஒரு போதும் வைக்கக் கூடாது.
சிவன் புகைப்படம் (அ) சிலை, நந்தி சிலையுடன் இணைந்து இருப்பது குடும்பத்திற்கு மிகவும் நன்மை தரும்.

Comments
Post a Comment