அஷ்ட லட்சுமியை எப்படி வழிபாடு செய்வது?
நம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு
சேர்க்கும் செல்வம் நிலைத்து இருக்க,
பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும்
என்றாலும், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்
நாம் சிக்கிக் கொள்ளாமல், நம்முடைய தேவைகள்
நிறைவேற வேண்டும் என்றால், அன்னை
மகாலட்சுமியின் அருளோடு சேர்ந்த
அஷ்டலட்சுமிகளின் பரிபூரண அருளும்,
ஆசிர்வாதமும் கட்டாயம் ஒருவருக்கு
இருக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமையில் சுக்ர ஓரை
வரக்கூடிய சுப வேளையில், வெள்ளி
விளக்கில் பசு நெய் ஊற்றி, வெண்மையான
பஞ்சுத்திரி போட்டு, விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய,
இல்லத்தில் அஷ்ட லஷ்மி யோகம் உண்டாகும்
என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது..
அஷ்ட லஷ்மி யோகத்தின் மூலம்,
பண வரவு அதிகரித்து சேமிப்பு உயரும்.
நாம் முயற்சிக்கும் அனைத்து செயல்களுக்கும்
வெற்றி கிடைக்கும். உடல் நல்ல ஆரோக்கியம் பெறும்.
நமக்கு அறிவுத்திறன் மற்றும் சக்தி அதிகரிக்கும். குழந்தை
பாக்கியம் கிட்டும். இதனால் தைரியம் மற்றும் மன உறுதி
மேம்படும். மேலும் தினமும் லட்சுமி தேவியை
வணங்குவதன் மூலமும், அஷ்டலட்சுமி
யோகத்தை ஈர்க்க உதவும்.
Comments
Post a Comment