Skip to main content

Posts

Showing posts from October, 2025

வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ

சில எளிய பரிகாரங்கள் .... வீட்டின் நுழைவு வாயில்... உங்கள் இல்லத்தின் நுழைவு வாயிலில்  ஒரு வெற்று சுவர் இருந்தால், உங்கள் இல்லத்தில் தனிமை அதிகம் என்று அர்த்தம். ஆகையால் இல்ல வாசலில் விநாயகர் சிலை ஒன்றை வைத்தால், அது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற்றுத்தரும். படுக்கையறை...  உங்கள் இல்லத்தைக் கட்டும்போதோ அல்லது கட்டிய வீட்டை வாங்குபவராக இருந்தாலும் சரி, உங்கள் படுக்கையறை இல்லத்தின் தென்மேற்குப் பகுதியை நோக்கி இருக்க வேண்டும் என்பதைச் உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் இது தனிப்பட்ட உறவுகளுக்கு நிறைய ஸ்திரத்தன்மையையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாகும். இவ்வாறு செய்வதால் உங்கள் செல்வச்செழிப்பை மேம்படுத்தும். மேலும் இது உங்கள் செல்வ வளத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்யும். பின்னர் படுக்கையறை எப்போதும் நன்கு ஒளிரும் வகையில் பிரகாசமான நிறத்தில் இருத்தல் அவசியம். மேலும் இருண்ட வரைபடங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது படுக்கையறைக்குள் நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும். உடைந்த பொருட்கள்... இல்லத்தில் உடைந்த பொருட்கள் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்...

Saraswathi 108 Potri - சரஸ்வதி துதி

சரஸ்வதி 108 போற்றி | Saraswathi 108 Potri Lyrics Tamil |  சரஸ்வதி துதி கணபதி வணக்கத்திற்கான மந்திரம் "ஓம் கம் கணபதயே நமஹ"   இது மிகவும் சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் ஆகும்.  இதைத் தொடர்ந்து உச்சரித்து வந்தால், மனமும் உம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நாம் தொடங்கும் அனைத்து காரியங்களும் சித்திக்கும். ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா இது சரஸ்வதி தேவியை துதிக்க  சொல்லப்படும்  ஒரு எளிய மந்திர ஸ்லோகம்! விளக்கம்:  தேவி சரஸ்வதி! உனக்கு வணக்கம், வரம் தருபவளே, ஆசைகளின் வடிவானவளே கல்வி கற்க ஆரம்பிக்கிறேன்.  சரஸ்வதி என்பது அறிவு மற்றும் வித்தையின் தெய்வம். "தடங்கலற்றுச் சாரையாகப் பாயும் எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல்" என்பதே சரஸ்வதியின் தத்துவமாகும். எவரொருவருக்குத் தடையில்லாத, சீரான ஒரே கவனம் இருக்கிறதோ அவருக்கு சரஸ்வதியின் அருள்  பரிபூரணமாக  உண்டு.  எனவே "சரஸ்வதி நமஸ்துப்யம்" என்றால் சீரான எண்ணத்தை உண்டு பண்ணும் ஆற்றலுக்கு அதிபதியே உனக்கு வணக்கம் என்று அர்த்தம்(பொருள்)! அடுத்தது வரதே காமரூபிணி, சரஸ...



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com